Saturday, June 5, 2010

நம்பிக்கை.........

நம்பிக்கை அறிவாய் மனிதா நீ நம்பிக்கை எது வென அறிவாய்...

நம்பிக்கை உனது மனம் எதுவென்று
சிந்தனை செய்யாமலேயே "நீ சொல்கிறாய்
யாரிடமோ நீ என் மனதில் இருக்கிறாய் என "
....................................................................................................................
நீ உனது பற்களைப் பார்க்காமலேயே
நம்பிக்கை கொண்டிருக்கிறாய்....
உனது நாக்கு நலமாய் இருக்கிறதென்று...
......................................................................................................................
உன்னை அறியாமல் சொல்லிகொடுக்கும்போது நீ
ஒருவனுக்கு ஆசான் என்பதை
உன்னிடம் கற்றுக்கொல்பவனின் நம்பிக்கை
என்பதை நீ சாகும் தருணமேனும் அறிவாயோ...
.......................................................................................................................
என்னை நீ காண்பாய் என நீ நம்பிக்கைகொள்
நிச்சயம் ஒருநாள் பார்ப்பாய்...
ஆனால் என்னை நீக் கண்டுவிட்டாய் என்பதை
நீ உணரும் முன்பே நான் உன்னை விட்டு அகன்று விடலாம்.....
.............................................................................................
நீ சொல்லும் வார்த்தைகளுக்கு
நீதான் சொந்தக்காரன் என்று
நீ நம்பிக்கை கொண்டிருக்கும் வரை
நீ நீயாகவே இருப்பாய்...
...............................................................................................................
மழை வரும் என்று ஒருவன் சொன்னால் நீயும்
மழை வரும் என்று சொல் உன்னைப்பார்த்து
இன்னும் ஒருவன் சொல்வான் மழை வரும் என்று....
இப்படியாகத்தான் தூது அனுப்பாப் படுகிறது இறைவனுக்கு..............
மழை வேண்டும் இறைவா என்று...
.................................................................................................................