கண்களை மூடு-நீ
கண்டிராத உலகம் உன்
கற்பனையில் விரியும்...
விரல்கள் வித்தைகள் கற்கும்..
கால்கள் பாதை மறக்கும்..
உலகம் உறங்கும் தருணம்...
உதிரத்தில் உவகை சுரக்கும்...
இரவு உதைத்துவிட்ட பந்தாக
விடியல் உன் உள்ளத்தில் பிறக்கும்..
முட்களின் முனைகளில்
முத்துக்கள் முலைவிடும்..
காகம் கவிபாடும் போது
கண்கள் சடுகுடுவாடும்...
மௌனம் சம்பவிக்கும் போது
மனதிற்குள் மழைபெய்யும்...
விட்டிப்பூச்சி விளக்கில்தாவ
விரல்விட்டுக் காப்பற்ற
உயிர் துடிக்கும்...
கார்காலம் கண்ணில் பட்டால்
இதயத்தில் வெயிலடிக்கும்...
பருந்திடம் துடிக்கும் பாம்பைக்காக்க
எலிகள் ஏணிமீதேரும்..
தண்ணீரில் நீந்தும் மீன்கள்
தறையேறிப் புல்தேடித் தாகந்தணியும்...
குருடனின் கைகள் சாம்பலில்
சிலைசெதுக்கும்..
காற்றில் ஓலைசெய்து
மயிலிறகு கவியெழுதும்...
மஞ்சல் பூக்களில் மாலைநெய்து
சிங்கமொன்று மானுக்கு
மகுடமேற்றும்...
குத்துச் சண்டை வீரனோடு
குயிலிசைப் போட்டியிட்டு
வென்றுகாட்டும்...
புல்லாங்குழல் இசைக்கேட்ட
புலிக்கூட்டம் மண்டியிடும்...
கரைபுரளும் கடலெல்லாம்
கைக்குட்டையாகி முகம் துடைக்கும்...
உன் கோபப் பார்வையின்
உஷ்ணத்தில்...
உதித்து வரும் ஆதவன்
உடைந்துருகிப் போகும்...
உன் தென்றல் புன்னகையில் குளிர்காய
சந்திரனும் சுத்திச் சென்று
சுல்லி பொறுக்கும்..
முட்டைகள் மூச்சுவிடும்
கற்களின் இடுக்குகளில்
மலைத்தேன் வழியும்..
வானம் இடிந்து பூமிக்குள் புதையும்...
வருஷங்கள் விதைந்து
நிமிஷங்கள் மலரும்..
நட்சத்திரங்கள் கூடி
நல்லதோர் வீடு செய்யும்...
பொதியமலை சிதைந்து
இமையமலை உருகி
நீண்டதோர் நீச்சல் குளமமைக்கும்...
அதில் நீந்திவிலையாட
கிரகப்பந்துகள் மிதக்கும்..
நீ உடுத்திக்கோண்டு உலாவர...
குத்தாலத்து அருவிகள்
ஆடைபிண்ணும்...
நீ பல்துலக்க, கருவேலங்காடு
களையப்பட்டு களியாகும்...
நீ உலகைப் பார்வையிட
பனைமரக்காடு பாலமமைக்கும்...
உன்னை ஏந்திப் பறக்க
பருந்துக்கூட்டம் பந்தையம் வைக்கும்...
நீ சருக்கி விளையாட
பாலைவனங்கள் மண்குவிக்கும்..
உன் உதடுகள் தூய்மையாக
தூவனத் தூரல்கள் துணித் துவைக்கும்...
உன் மனத்திறையில் கண்டவை...
விழித்திறையின் முன் உலாவரும்...
நரகமாகிப்போன நகரங்களை
நைய்யப்புடைத்து..
விருட்சங்களை வீடுகளாக்கி...
மின்மினிகள் மினுமினுக்க...
வனவாழ் கூட்டம்
விழாவெடுத்துக் கொண்டாடும்...
நீர் குமிழிகள் நிறைந்து
உனக்கு தலையணைசெய்யும்...
நீ படுத்து உறங்குவதற்காக
பஞ்ச பூதங்களும்
பஞ்சு மெத்தையாகும்...
உலக நதிகலணைத்தும்
உள்ளங்கை ரேகையாகும்...
உன் ஆயுள் ரேகையின் நீளத்தில்...
அமேசான் ஆறு தண்ணீர் பாம்பாய்
தலைகாட்டும்...
கருப்பு நயாகரா உன்
கூந்தலில் வழிந்தோடும்..
மின்னல் கீற்றுகள்-நீ
தலைவார சீப்பாய் மாறும்...
உன் தாகம் தீர்த்துவைக்க
ஆகாய கங்கை தாய்பால் சுரக்கும்...
நீ தாலாட்டு கேட்க
தாமரைத் தேரினில்
தங்கப் பதுமைகள் உலாவரும்...
வாத்துக்களின் வினாக்களுக்கு
விஞ்ஞானக் கூட்டம் விழிபிதுங்கும்...
கம்பன் காளிதாசன் கண்டிராத
கற்பனைவளம்..
கண்களின் கருமுட்டைக்குள்
புதைந்துகிடக்கும்...
ஜன்னல் கம்பிகளின் வழியே
விண்கற்கள் விழுந்து
மீன் தொட்டியை அலங்கரிக்கும்...
உன் பசியைத்தீர்த்துவைக்க
உணவுகள் ஓடிவரும்
பாறை தேய்ந்து பள்ளமாகும்...
நடந்து நடந்து நாட்கள் நோகும்...
காத்திருக்க காலம் ஏங்கும்...
கடந்து செல்ல கால்கள் விரையும்...
வளைந்திருக்கும் வானவில்லும்
நிமிர்ந்துபார்த்து நெட்டி முறிக்கும்..
குண்டூசிகள் கொண்டையில் பூச்சூடும்
குத்தூசிகள் காதினில் வலையம் மாட்டும்...
தனிமை உன் உறக்கத்தைத் தாளாட்டும்...
காதலிக்கப் பெண்ணொருத்திக் கண்தேடும்...
பெண்ணிர்கோ என் போன்ற ஆண்தேடும்...
கல் பட்டும் கீராத கண்ணாடி
கண்பட்டே நோறுங்கி விழும்...
"ற்" க்குப் பக்கத்தில்
ஒற்றெழுத்து முளைத்திருக்கும்...
கற்றாலை முனைகீர
கனிரசம் கசிந்துருகும்...
வேப்பங் கொட்டை உடைத்து
வாயில் போட அமுதம் சுரக்கும்...
மலைப்பாதை வளைவுகளில்
பவளப்பாறை முலைத்திருக்கும்...
இமைகள் மோத இடிமுழக்கம்...
அதற்குப் பின்னே மின்னல் வெட்டும்...
கலைமகள் வீணைக் கையகப்படும்...
கற்றுளி ஓசை சிலையனப்படும்...
சந்தனச் சங்கு பூக்களில் ஒலிக்கும்...
சங்கரன் சக்கரம் சக்கரையாகும்...
வாரணம் கோடி வானரம் கூடி
வண்டுகள் இசைக்க நாட்டியமாடும்...
வித்தகன் விரல்கள் வில்பிடித்தெய்தும்...
பித்தனின் எண்ணம் சித்தமாயாகும்...
நல்லவை மட்டும் புத்தியில் ஒலிக்கும்...
தீயவையெல்லாம் தீக்கிரையாகும்...
அல்லவையெல்லாம்
உள்ளவையாகும்...
இல்லெனும் சொல்லே இல்லாமல் போகும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment